அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (19:29 IST)
தமிழகத்தில் அடுத்த  2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் தோன்றியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்ததநிலையில், அடுத்த 2 மணி நேரத்தில், தமிழகத்தில் உள்ள  திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மற்றும் ஆகிய  5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்