ஒடிஷா மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (19:10 IST)
ஒடிஷா மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஒடிஷா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோரே ரயில் நிலையத்தில் இன்று  சரக்கு ரயில் ஒன்று டோங்கோபோசி என்ற இடத்தில் இருந்து, சத்ரபூர் நோக்கி ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது.,  ரயில் நிலையம் அருகே 6.45 மணிக்குச் சென்றபோது, அந்த ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.

இந்த ரயிலின் 8 பெட்டிகள் நடைமேடை மற்றும்ங்கு நின்றிருந்த   பயணிகள் மீதும் மோதியது.

இதில், 3 பயணிகள் உயிரிழந்தனர்.  இந்த ரயில் விபத்திற்கான காரணம் பற்றி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்