தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (18:09 IST)
தமிழகத்தில்  நாளையும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் எவும் நாளை  13 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில்  நாளையும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தூத்துக்குடி,ராம நாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்