மீண்டும் ஒரு மெரினா போராட்டமா? தூத்துக்குடியில் செல்போன் லைட் வெளிச்சம்

Webdunia
ஞாயிறு, 25 மார்ச் 2018 (10:00 IST)
சென்னை மெரீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஹைலைட்டே அங்கு கூடியிருந்தவர்கள் செல்போன்கள் மூலம் லைட் அடித்து தங்களது உணர்வை வெளிப்படுத்தியதுதான். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்துதான் 'வேலைக்காரன்' படத்தில் கூட இதே போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே உள்ள ஆலையின் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்ற் போராட்டக்காரர்கள் கூறி வரும் நிலையில் அந்த ஆலையை புதுப்பிப்பது மட்டுமின்றி இன்னொரு ஆலைக்கும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்தமாக நேற்று தங்கள் செல்போனில் இருந்து லைட் அடித்து போராட்டத்தின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுக்கு உணர்த்தியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்