பார்சலில் செல்போனுக்கு பதில் பொம்மையை அனுப்பி நூதன முறையில் மோசடி

ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (12:27 IST)
கும்பகோணத்தில் வாலிபர் ஒருவருக்கு பார்சலில் செல்போனுக்கு பதில் பொம்மையை அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடர்கள் பலர், மக்களின் பணத்தை நூதன முறையில் திருடி வருகின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிகொடுக்கும் மக்கள் பல பிரச்சனைகளில் சிக்கி கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
 
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த கோபி(39) என்பவருக்கு போன் செய்த மர்ம நபர்  ரூ.3 ஆயிரத்துக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்குகிறோம் என்று கூறினார். இதனை நம்பிய கோபி, மனைவியின் கொலுசை அடகு வைத்து 3000 ரூபாயை  அனுப்பி உள்ளார்.
 
இதனையடுத்து தனக்கு வந்த பார்சலை, கோபி ஆசையுடன் திறந்தபோது அதில் செல்போனுக்கு பதிலாக பொம்மை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றுப்பட்டதை உணர்ந்த கோபி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் கோபியை ஏமாற்றிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்