சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு போலீசார் இருக்கும் நிலையில் இன்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அருள் என்ற போலீஸ்காரர் திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரையை சேர்ந்த அருள் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது