கார்ட்டுனிஸ்ட் பாலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (19:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் வெங்கையா நாயுடு, முதலமைச்சா் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலர் பேசினாலும் ரஜினி பேசியது மட்டுமே ஊடகங்களின் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதிலும் வெங்கையா நாயுடு குறித்து ரஜினி பேசிய பல அர்த்தமுள்ள கருத்துக்கள் எந்த மீடியாவில் செய்தியாக வரவில்லை. அமிர்ஷா குறித்து அவர் பேசியது, அமித்ஷா மோடி ஆகிய இருவரையும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒப்புமைப்படுத்தி கூறியதும்மட்டுமே ஊடகங்களும் சமூக வலைதள பயனாளிகளும் விமர்சகர்களும் கையிலெடுத்துக் கொண்டனர் 
 
அந்த வகையில் கார்ட்டுனிஸ்ட் பாலா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூனை பதிவு செய்து, 'ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த ஏமாளி தமிழன் முதுகில் குத்தியது மட்டுமே நீங்கள் செய்த பதில் நன்றி' என்று பதிவு செய்துள்ளார் 
 
கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கார்ட்டூனுக்கும் அவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர்ப் பிரச்சினையால் தத்தளித்த சென்னை உட்பட பல நகரங்களுக்கு லாரிகளில் தண்ணீர் கொடுத்த போது இந்த பாலா ஏன் கார்ட்டூன் வரையவில்லை? சூர்யாவின் கல்வி கருத்தை ஆதரித்த போது இந்த பாலா ஏன் கார்ட்டூன் வரையவில்லை? எச். ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித் தனமானது என்று கூறியபோது இந்த பாலா ஏன் கார்ட்டூன் வரையவில்லை? என்று நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
பாஜகவை புகழ்ந்து பேசும் போது மட்டும் ரஜினியின் வில்லனாக தெரிவதால் இவரை பின்னாலிருந்து இயக்குவது ஒரு குறிப்பிட்ட கட்சி என்பது தெளிவாகி விட்டதாகவும் ஒரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை ரஜினி எந்த மேடையிலும், மேடை அல்லாத இடங்களிலும் யாரையும் குறை கூறவில்லை. ஆனால் ரஜினியை குறை கூறுவதற்கு என்றே ஒரு குரூப் இருப்பதாக இன்னொரு டுவிட்டர் பயனாளி கருத்து தெரிவித்திருந்தார். மொத்தத்தில் ரஜினியை விமர்சித்ததால் மட்டுமே நமது பெயர் வெளியே வரும் என்ற நோக்கில் விமர்சனம் செய்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும் என்று பல நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்