வசதியாக வாழ வேண்டி கஞ்சா கடத்திய மாணவர்கள் ..

Webdunia
திங்கள், 25 நவம்பர் 2019 (19:47 IST)
ஆந்திர மாநிலத்தில், கல்லூரி மாணவர்கள் சொகுசாக வாழ வேண்டி கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் தாடேபள்ளி என்ற பகுதியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார் அந்த வழியே வந்தது. அதை போலீஸார் தடுக்க முயன்றபோது, கார் திரும்பிச் சென்றது.
 
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில் இருந்த கல்லூரி மாணவர்களை விசாரித்தனர்.
 
அப்போது, ஆடம்பர தேவைகளுக்காக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவத்தில் போலீஸார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்