போர்வைத்திருவிழா :மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் 150 போர்வை வழங்கியது !

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (20:22 IST)
324 F அரிமா மாவட்ட செயல் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சாலை ஓர ஏழை எளிய மக்களுக்கு குளிர் தடுக்கும் உதவியாக மாவட்டத்தில் உள்ள அனைத்துச்சங்கங்களும் போர்வை வழங்கும் விழா நடைபெற்றது.
 
இவ்ஆண்டு மெஜஸ்டிக் சார்பில் இன்று முன் இரவு ஆரியாஷ் உணவக கூட்ட அரங்கில் ஏழை எளிய பணியாளர்கள் வாட்ச்மேன்கள் அழைக்கப்பட்டு தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்க , கேபினட் நிர்வாக ஆலோசகர் மேலை பழநியப்பன் திட்ட விளக்கமளிக்க மண்டல மாநாடு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் , வட்டாரத் தலைவர் சாந்தி லெட்சுமி 150 பேருக்கு போர்வைகள் வழங்குவதை துவக்கி வைத்து வாழ்த்துரைத்தனர்.
 
லயன் ராமசாமி , லயன் பூபதி , லயன் அகல்யா மெய்யப்பன் லயன் வைஷ்ணவி மெய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
இந்த நிகழ்ச்சியின்போது, செயலாளர் சீனிவாசபுரம் வெங்கட்டரமணன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்