கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் செயல்பட தடை- மாசுக்கட்டுப்பாடு வாரியம்

புதன், 27 டிசம்பர் 2023 (18:30 IST)
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இன்று காலை ஆலையில் இருந்து அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் சுற்றுவட்டாரத்தில் இருந்த் மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் தொழிற் சாலை மீண்டும் செயல்பட தடைவிதித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் இன்று நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
 
இதுகுறித்து மாசுகட்டுப்பாடு வாரியம், எண்ணூர் தொழிற் சாலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுக்கசிவு 20 நிமிடங்களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட்ன என்று தெரிவித்துள்ளது,
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்