பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு...

J.Durai
புதன், 17 ஜூலை 2024 (10:51 IST)
கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்  அப்போது பேசிய அவர், :-
 
தி.மு.க வினருக்கு 40 எம்.பிகளை கொடுத்த மக்களுக்கு, அவர்கள் பரிசாக மின் கட்டண உயர்வை கொடுத்து இருக்கிறார்கள் என மின்கட்டண உயர்வை விமர்சித்தார். 
 
இந்த மின் கட்டண உயர்வால் சிறு ,குறு தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் எனவும் மக்களை பாதிக்கின்ற மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரீசிலினை செய்து கட்டண உயர்வை குறைக்க  வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
 
 தமிழக அரசு தான் இந்தியாவிலே அதிகமாக கடன் வாங்கிய அரசு என குறிப்பிட்ட அவர்  பல மடங்கு வரி உயர்வும் இங்கு தான் உள்ளதாக  குற்றம் சாட்டினார். 
தமிழ்நாட்டில் தொடர் படுகொலைகள் என்பது இங்கு சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதை காட்டுவதாக கூறினார். அரசியல் கட்சியினருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனவும். முதலமைச்சர் கூறுவது போல் தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை எனவும் தெரிவித்தார். காவிரி விவாகரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினால் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கர்நாடக அரசு கேட்காதா? என கேள்வி எழுப்பிய அவர் இந்தியா கூட்டணியில் அதிக எம்.பிகளை  வைத்து உள்ள  தி.மு.க, காவிரி விவாகரத்தில் காங்கிரஸ் அரசுடன் பேச வேண்டியது தானே? என கேள்வி எழுப்பினார்.  
 
மேலும் கூட்டணி தர்மம் என்பது மக்களின் உரிமை பாதுகாப்பதும் தான் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்