பென்னிக்ஸ் முகநூல் பதிவுகள் நீக்கப்படுகிறதா? பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (08:17 IST)
பென்னிக்ஸ் முகநூல் பதிவுகள் நீக்கப்படுகிறதா?
சாத்தான்குளத்தில் அடித்துக் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரான பென்னிக்ஸ் முகநூல் பதிவில் உள்ள ஒருசில பதிவுகள் திடீரென நீக்கப்பட்டு வருவதாக பாஜக பிரமுகர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
பிரதமர் மோடியின் ஆதரவாளர் தான் பென்னிக்ஸ் என்றும் பிரதமர் மோடி குறித்து பெருமையாக பல பதிவுகளை அவர் பதிவு செய்துள்ளார் என்றும், அதே நேரத்தில் பென்னிக்ஸ் திமுகவின் எதிர்ப்பாளர் என்றும் திமுகவுக்கு எதிராகவும் அவர் சில பதிவுகளை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பென்னிக்ஸ் முகநூலில் திமுகவுக்கு எதிராக ஒரு சில பதிவுகள் தற்போது நீக்கப்பட்டு வருவதாக பாஜகவின் நிர்வாகி  நிர்மல் குமார் என்பவர் தனது டுவிட்டரில் குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து தீர விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
சாத்தான்குளத்தில் இறந்த சகோதரர் பென்னிக்ஸ் முகநூல் பதிவுகளில் திமுகவிற்கு எதிரான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதை காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் மீது பற்றும், மரியாதையும் கொண்ட பென்னிக்ஸின் முகநூல் பதிவுகளை நீக்குவது யார்? பதிவுகளை நீக்குவதன் உள்நோக்கம் என்ன? என டுவிட்டரில் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சமீபத்தில் பென்னிக்ஸ் மறைவிற்காக திமுக சார்பில் 25 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்