நாங்குநேரியில் பாஜக போட்டியா?: புதிய வியூகம் வகுக்கும் பாஜக?

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (17:25 IST)
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பாஜக போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டசபைகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. நாளையோடு வேட்பு மனு தாக்கல் முடிவடைய இருக்கும் நிலையில் பாஜக நாங்குநேரியில் போட்டியிட போவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன.

நாங்குநேரியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜகவோ போட்டியிடுவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இன்று நடந்த விழா ஒன்றில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “பாஜக இடைத்தேர்தலில் எங்களுக்கு பக்கபலமாக இருக்கும்” என்று பேசியிருந்தார். ஆனால் அதிமுகவுக்கே சொல்லாமல் பாஜக நாங்குநேரியில் போட்டியிடுவது சாத்தியமா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி காமராஜ் நகரிலும் பாஜக போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக சி.பி.ராதாகிருஷ்ணன் “புதுச்சேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து புதுச்சேரி பாஜகதான் முடிவெடுக்க வேண்டும். பாஜகவின் முடிவுகள் நாளை காலைக்குள் தெரிய வரும்” என்று சூசகமாக கூறியுள்ளார்.

இதனால் பாஜக நாங்குநேரியில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட வியூகம் வகுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்