புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு பிரதோஷத்திற்கு வழிபட 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றிருக்கின்றனர். வழிபட சென்றவர்களுக்கு கோவில் வளாகத்தில் பிரசாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதை சாப்பிட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே பலருக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் அறநிலைய துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். சுகாதாரமற்ற முறையில் உணவு சமைக்கப்பட்டதால் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.