நாங்குநேரி ,விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் களமிறங்குகின்றன. அதேப்போல அதிமுக கூட்டணியில் தமிழகத்தில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.