ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து...64 பேர் காயம்!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (17:35 IST)
கேரளாவில்  தமிழக ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 64 பேர் காயமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒரு தனியார் பேருந்தில் கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றனர். இதில், 64 பெரியர்கள், 9 சிறுவர்கள் பேருந்தில்  இருந்தனர். அவர்கள் கோயிலுக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற பகுதியில் இலவுங்கலெருமேலிக்கு வரும்போது, 3 வது வளையில் பேருந்து எதிர்பாராத விதமாகக் கவிழிந்து விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் பேருந்து ஓட்டுனர் பலத்த காயமடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், இவ்விபத்தில், மொத்தம் பயணித்த 64 பேர் காயமடைந்துள்ள நிலையில், பேருந்திற்குள் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு, கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

 இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்