2026-ஆம் ஆண்டு இந்தியா, இந்து நாடாக அறிவிக்கப்படும் - பாஜக எம்.எல்.ஏ

செவ்வாய், 14 மார்ச் 2023 (19:23 IST)
வரும் 2026 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்படும் என்று பாஜக எம்.எல்.ஏ  பேசியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்திலுள்ள ரஹடா என்ற பகுதியில், இந்துத்துவா அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஐதராபாத் கோஷாமஹால் என்ற தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ‘’அகமதாபாத் மற்றும் தெலுங்கானா ஆகிய மா நிலங்கள் முறையே அஹில்யாபாய் நகர் மற்றும் பாக்யா நகர் எனப் பெயர்  மாற்றப்படும். வரும் 2026 ஆம் ஆண்டு இந்தியா, இந்து நாடு என்று அறிவிக்கப்படும். உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நாடுகளும், 50 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளும் இருக்கும் நிலையில், 100 கோடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்தியாவை ஏன் இந்து நாடாக அறிவிக்க முடியாது? அதனால் வரும் 2025 -2026 ஆம் ஆண்டிற்குள் இந்தியா, இந்து நாடாக அறிவிக்கப்படும். இதனை இந்துக்கள் வலியுறுத்துவதாகவும்’’ கூறியுள்ளார்.

ஏற்கனவே பாஜகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பாஜக. எம்.எல்.ஏ ராஜாசிங்கின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்