தெரு பொறுக்கி நாய்களை அடித்து ஓடவிடனும்! பொள்ளாச்சி சம்பவம் குறித்து வீடியோ பதிவிட்ட அதுல்யா.!

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (19:00 IST)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காமக்கொடூரன்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன.

காம வெறியர்களின் இந்த செயலை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் , மக்கள் என அனைவரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர்.  இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு நடிகர், நடிகைகளும் கண்டனம் தெரிவித்ததையடுத்து தற்போது  நடிகை அதுல்யா இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இதுகுறித்து பேசியுள்ள அவர், இதுபோன்ற தெரு பொறுக்கி நாய்கள் செய்யும் விஷயத்தால் ஒரு சில நல்ல  பசங்க பெயரும் கெட்டு விடுகிறது. மேலும் இதுபோன்ற தவறு மற்ற நாட்டில் நடந்தால் என்ன தண்டனை கொடுப்பார்களோ அதே தண்டனை இவர்களுக்கும்  கொடுக்க வேண்டும் என்று கூறி பெண்களையும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள அறிவுரை வழங்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்