பொள்ளாச்சி கொடுமை: பப்ளிக்கா உண்மையை சொன்ன பிரசன்னா! கொதித்தெழுந்த குஷ்பு!

செவ்வாய், 12 மார்ச் 2019 (15:14 IST)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
 

 
இந்நிலையில் இதுதொடர்பாக பல நடிகர் நடிகைகள் தொடர்ச்சியாக தங்கள் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். அதனை தொடர்ச்சியாக காணலாம். 
 
பிரசன்னா:- 
 
தேர்தல் நாடகங்கள் மீது அனைவரின் கவனமும் இருப்பது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது என்கிறார் பிரசன்னா.

 
விஜயலட்சுமி:- 
 
யோசிக்கவே வேணாம் நிக்க வெச்சு சுடுங்க  பயம் வரட்டும். பணபலம்,அதிகாரம்,வயசு,குரூர மனசுனு இந்த காம்பினேஷன்ல கால தூக்கி காட்ற கருமாந்ரோலா பயத்துல பொத்திகிட்டு பொழப்ப பாக்கனும் உயிர் பயம் வந்தா தான் உருப்படுவான்க. போட்ருங்க சார் உடனே.!!!
என்று ட்வீட் செய்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

 
குஷ்பு:- 
 
காமகொடூரன்களை வெறிநாய்களிடம் தூக்கி போடவேண்டும். இந்த கோரமான செயலை செய்த ஒருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது. எனது இரத்தம் கொதிக்கிறது. அந்த கொடூரமிருகங்களுக்கு ஒரு துளியளவு கூட கருணை காட்டக் கூடாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
 
ஆரவ்:- 
 
பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த ஆண்களை மிருகங்களுடன் ஒப்பிடக் கூடாது. ஏனென்றால் இதற்கு முன்பு இதுபோன்று மோசமான ஆட்களை பார்த்தது இல்லை. அவர்கள் வாழத் தகுதி இல்லாதவர்கள் என்கிறார் ஆரவ்.


 
 ஹிப் ஆப் ஆதி:-
 
மனித போர்வையில் மிருகங்கள். நெஞ்சு பதைக்கிறது. இந்த காம கொடூரர்களுக்கு சட்டத்தையும் மிஞ்சிய தண்டனை வேண்டும். மனிதம் மனதில் ஒரு ஓரத்தில் இருந்திருந்தால் கூட இதை செய்திருக்க மாட்டார்கள் என ஹிப் ஆப் ஆதி தெரிவித்துள்ளார். 



வைபவ்:- 
 
பொள்ளாச்சி சம்பவங்கள் பற்றி படித்துவிட்டு இதயம் நொறுங்கிவிட்டது. கோபத்தை விட பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் பற்றி தான் நினைப்பாக உள்ளது. தடைகளை தாண்டி வர ஆண்டவன் அவர்களுக்கு சக்தியை கொடுக்கட்டும் என்று நடிகர் வைபவ் ட்வீட் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்