என் மகன் எந்தத் தப்பும் செய்யல: எகிறிய திருநாவுக்கரசின் தாய்! வைரலாகும் வீடியோ!!!

செவ்வாய், 12 மார்ச் 2019 (16:40 IST)
பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து கைது செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு எந்த தவறும் செய்யவில்லை என அவரது தாயார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.
 
பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து , ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு,  சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார்  உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு நேற்றுடன் 15 நாட்கள் காவல் முடிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்று மீண்டும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம் 3 பேருக்கும் மேலும் 15 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து  சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில்  திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாய் லதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
 
இந்த மனு, நீதிபதி ஆறுமுகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் தரப்பிலும் அவரது தாயார் தரப்பிலும் வாதங்களை முன்வைத்தனர். அதையடுத்து, 'கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திருநாவுக்கரசிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கை வந்த பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், ஜாமீன் வழங்கினால் திருநாவுக்கரசு வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. திருநாவுக்கரசுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தை  விட்டு வெளியே வந்த அவரது தாயார் ஆவேசமாக பேசினார். "எனது மகன் திருநாவுக்கரசு எந்தத் தப்பும் செய்யல. அவனைக் கைதுசெய்து துன்புறுத்திவருகின்றனர்" என அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்