அத்திவரதர் தரிசனத்துக்கு செல்பவர்களுக்கு ஓர் இனிய செய்தி – கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (17:08 IST)
அத்திவரதரை தரிசிக்க மக்கள் நாள்தோறும் லட்சக்கணக்கில் வருவதால் தரிசன நேரத்தை மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் ஆட்சியர் பொன்னையா.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வான அத்திவரதர் தரிசனம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்து வருகிறது. ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த தரிசனத்தில் ஜூலை 30 வரை சயனக்கோலத்திலும், ஆகஸ்டு 1 முதல் 17 வரை நின்ற திருக்கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். தற்போது நின்ற திருக்கோல தரிசனம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

சயனக் கோலத்தில் அத்திவரதரை தரிசித்தவர்கள் நின்ற திருக்கோல தரிசனத்தையும் காண வருவதால் கூட்டம் அதிகரித்துள்ளது. அதனால் தரிசன நேரத்தை அதிகரித்துள்ளனர். இதுவரை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் நடைபெற்று வந்தது. இன்றுமுதல் காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை தரிசனம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்