பாசஞ்சர் ரயில்களில் நாள்தோறும் பயணம் செய்பவர்கள் சீசன் டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணிப்பது வழக்கம். வழக்கமாக பயணம் செய்ய ஆகும் செலவை விட மாதம் ஒருமுறை சீசன் டிக்கெட் எடுத்து கொள்வது செலவை குறைக்கும் என்பதால், நாள்தோறும் வேலைக்கு செல்பவர்கள் சீசன் டிக்கெட் பெற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் சீசன் டிக்கெட்டுக்கான பயண தூரத்திற்கு எல்லை உள்ளது. அதிகபட்சம் 150 கி.மீ தொலைவு பயணிப்பதற்கு மட்டுமே சீசன் டிக்கெட் வாங்க முடியும். விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு நாள்தோறும் பலர் வேலைக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எழும்பூரில் இருந்து திண்டிவனம் வரை செல்ல மட்டுமே பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் திண்டிவனத்திற்கு பிறகு பேருந்துகளை நாடி செல்ல வேண்டிய பிரச்சினை மக்களுக்கு இருக்கிறது.