இந்நிலையில், காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்களுக்காக கரூர் அருகில் உள்ள லாலாபேட்டை கடைவீதி மாரியம்மன் ஆலயத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் சயனநிலையில் உள்ள அத்திவரதரை மக்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சயன நிலையில் உள்ள பெருமாள் சிலையை அங்குள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு, காஞ்சிபுரம் அத்திவரதருக்கு செய்யப்பட்டுள்ளது போல பட்டு வஸ்திரங்கள், மலர் மாலைகளால் அச்சு, அசலாக காஞ்சிபுரம் அத்திவரதர் போல அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வழிபட வைக்கப்பட்டுள்ளது.
இன்று ஆடி 18 என்பதால், காவிரி ஆற்றுக்கு ஆடி 18 விழாவை கொண்டாடிவிட்டு வரும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் மட்டுமல்லாது, காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் இந்த அத்திவரதரை செய்து வருகின்றனர்.