திருக்குறளை மேற்கோள் காட்டி குஷ்புவை பாஜகவுக்கு இழுக்கும் பிரபலம்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (18:31 IST)
கடந்த சில நாட்களாகவே நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது என்பதும் இந்த வதந்திகளுக்கு அவ்வப்போது குஷ்பு மறுப்பு தெரிவித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
 
நேற்று பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் குஷ்பு பாஜகவில் இணையவேண்டும் என்றும் அவரைப் போன்ற தைரியமான பெண்கள் பாஜகவில் இணைந்தால் மற்ற பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு ஊக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்து அழைப்பு விடுத்தார்
 
இந்த நிலையில் தற்போது பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டுவிட்டரில் குஷ்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விட்டு அவர் பாஜகவில் இணைந்து சேவை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவர் ஒரு திருக்குறளை குறிப்பிட்டு அந்த அந்த திருக்குறளின் பொருளின்படி குஷ்பு பாஜகவில் இணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவு செய்த திருக்குறள் இதுதான்:
 
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து 
துன்னியார் துன்னிச் செயின் 
 
ஆசிர்வாதம் ஆச்சாரியாரின் பதிவு செய்த திருக்குறளும் அவர் பாஜகவுக்கு விடுத்த அழைப்பும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்