முதல்வரை பார்க்க போனது இதற்காகதான்! – உண்மையை உடைத்த புகழேந்தி!

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (12:55 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்க்க சென்றது எதற்காக என்பது குறித்து கூறியுள்ளார் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி.

அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று முதல்வர் எடப்பாடியை பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டில் சென்று சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய புகழேந்தி “முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனது நெடுநாளைய நண்பர். நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. அம்மா ஜெயலலிதா இல்லாத போது இந்த கட்சியை இவ்வளவு சிறப்பாக நிர்வகித்திருப்பது பெரிய சாதனை. எனவே தேர்தல் வெற்றிக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து சொல்லவே இங்கு வந்தேன். கட்சியில் சேர்வதற்காக இன்று வரவில்லை” என்று கூறியுள்ளார்.

எனினும் அதிமுக வெற்றிக்கு புகழேந்தி தாமாக முன்சென்று முதல்வருக்கு வாழ்த்து தெரிவிப்பது ஏன்? பின்னாளில் அதிமுகவில் சேர்வதற்கு அச்சாரமா இந்த சந்திப்பு? என்று பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்