இதன் பிறகு பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார். இந்நிலையில் இன்று காலை 5 மணி சிறப்பு காட்சிகளுடன் பிகில் திரைப்படம் இன்று வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.