தமிழகத்தில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி என இரண்டு கூட்டணிகள் இதுவரை தேர்தலில் போட்டியிட்ட நிலையில் ஒரு சில தேர்தலில் மூன்றாவது கூட்டணி அமைந்தாலும் அந்த கூட்டணி வெற்றி பெற்றதில்லை.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று தெரிகிறது. தேமுதிக, பாமக, புதிய தமிழகம், அமமுக, ஓபிஎஸ் அணி உள்பட சில கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தால் ரிசல்ட் எப்படி இருக்கும் என அமித்ஷா ஒரு சர்வே எடுத்து இருப்பதாக தெரிகிறது. அதில் 18 சதவீதத்திற்கு மேல் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் கிடைக்கும் என்றும் 23 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பெறுவோம் என்றும் ஐந்து தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பாஜக கூட்டணியை அமைக்க அண்ணாமலைக்கு அமித்ஷா பச்சைக் கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.