சென்னை 47 வது புத்தகக் கண்காட்சி நடந்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கொரோனா உடல் காத்தோம், உயிர் காத்தோம் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
அரசின் மருத்துவத்துறை மட்டுமின்றி எழுத்துத் துறையிலும் முத்திரைப் பதித்து வரும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய “கொரோனா - உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்” என்னும் புத்தகத்தையும், அதன் ஆங்கில பதிப்பான "Corona Chronicles"-ஐயும் சென்னை புத்தகக் காட்சியில் இன்று வெளியிட்டோம்.
2021-ல் கழக அரசு அமைந்த போது, நம் கண் முன் பெரும் சவாலாக கொரோனா 2- ஆம் அலை வேகமெடுத்து இருந்தது. அந்தப் பெருந்தொற்றை அறிவியலின் துணையோடு நம் கழக அரசு முறியடித்த வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார் அண்ணன் மா.சு அவர்கள்.