என் மீது ஓராயிரம் வழக்குகள் உள்ளதாகவும் நான் சாகும் வரை என்னை விசாரணை செய்து கொண்டே இருப்பார்கள் என்றும் நானே என் ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினேன் என்றும் சிபிஐ சோதனை குறித்து முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது கடத்தல்காரர்களுடன் கூட்டணியாக சேர்ந்து பொன் மாணிக்கவேல் சதியில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து காதர் பாட்ஷா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணையை தொடங்கிய நிலையில் இன்று திடீரென சிபிஐ அதிகாரிகள் பொன் மாணிக்கவேல் வீட்டில் சோதனை செய்தது. து இந்த வழக்கு குறித்து சில கேள்விகளை பொன் மாணிக்கவேல் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டதாகவும் அதற்கு அவர் பதில் கூறியதாகவும் தெரிகிறது.
சிபிஐ விசாரணைக்கு பின்னர் செய்தியாளர் அவர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல் ஓராயிரம் வழக்குகள் என் மேல் உள்ளது, நான் சாகும் வரை என்னை விசாரணை செய்து கொண்டே இருப்பார்கள், நானே சில ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று சிபிஐ அதிகாரிகளிடம் கூறினேன் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.