ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் முறைகேடு செய்ததாக வணிக வரித்துறை அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம் ஆகியோர் மீது ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர்களை இன்று பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் சிபிஐ அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து செல்வார்கள் என தெரிகிறது.