பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.. என்ன காரணம்?

Siva

சனி, 10 ஆகஸ்ட் 2024 (12:38 IST)
ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல்  வீட்டில் திடீர் என சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை பாலவாக்கம் என்ற பகுதியில் ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல்  வீடு இருக்கும் நிலையில் அவரது வீட்டில் இன்று காலை திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்ய வந்ததாகவும் தற்போது விறுவிறுப்பாக சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
 
பொய் வழக்கு பதிவு செய்து சிலை கடத்தல் பிரிவு முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்சாவை கைது செய்தது தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தொடர்பாக பொன் மாணிக்கவேல் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் கடந்த சில வாரங்களாக சிலை கடத்தல் குறித்து பரபரப்பான பேட்டி அளித்து வருகிறார் என்பதும் இந்த சிலை கடத்தலில் பல முக்கிய விஐபிகள் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்