’’கோயம்பேடு சந்தை’’ மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை !

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (15:17 IST)
சீனாவில் இருந்து  பல்வேறு நாடிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவி வருகிறது.  உலகளவில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுள்ளனர்.

இந்தியாவில் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். தமிழகத்தில்  உள்ள சுமார்  1 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு தொற்று பரவாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி ஏற்கனவே ஆசியாவில் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவும் தளமாக இருந்ததன் பொருட்டு, அதை அதிகாரிகள்   வேறு இடத்திற்கு மாற்றினர். தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளதால் மக்கள் சென்னையில் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் கோயம்பேடு சந்தையை திறப்பது குறித்து வியாபாரிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முதற்கட்டமாக 50 கடைகள் வரை திறக்கப்படலாம் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்