பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சரண் அடைந்துள்ளார்.
சமீப காலமாக கடவுள் மறுப்பாளர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் கந்தசஷ்டி கவசம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து யுட்யூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் கடவுள் மறுப்பு பேசி வரும் திராவிட இயக்கங்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் எழுந்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் சரணடைந்துள்ளார்.