4 மத்திய அமைச்சர் பதவி.. தூண்டில் போடும் பாஜக.. சிக்குமா அதிமுக?

Mahendran
வியாழன், 11 ஜனவரி 2024 (11:51 IST)
அதிமுக மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தால் நான்கு மதிய அமைச்சர்கள் பதவி தர தயாராக இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளதாகவும் இதனை அடுத்து அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் நிகழ்வில்  எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள இருப்பதாகவும் அப்போது அவரை சந்தித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அதிமுக வரும் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றால் நான்கு பேருக்கும் மத்திய அமைச்சர் பதவி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி தேர்தல் செலவிற்கும் பணம் கொடுப்பதாகவும் பாஜக ஆஃபர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ALSO READ: டிராபிக் பிரச்சனை இல்லை.. பெட்ரோல் தேவையில்லை.. இந்தியாவில் விரைவில் பறக்கும் கார்..!
 
இதனை அடுத்து மீண்டும் பாஜக கூட்டணியில் அதிமுக இணையும் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதாக அதிமுக தெரிவித்தபோதிலும் பாஜகவை அக்கட்சி பெரிதாக விமர்சனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து மீண்டும் பாஜக கூட்டணியில் அதிமுக சேருமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்