நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகே தெற்கு தெரு மாரியம்மன் சிலை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் இந்த சிலைக்கு பூஜைகள் நடந்து முடிந்து நடை சாத்தப்பட்டது. அதன்பின் பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக வந்தார். அப்போது அவர் அம்மனை பார்த்து வழிபட்டுக் கொண்டிருந்த பொது திடீரென அம்மன் சிலையில் கண் திறந்திருப்பதாக அறிந்து பக்தி பரவசத்திலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.
இரவில் கோவில் நடை அடைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போதும் அம்மனின் கண் திறந்து இருந்ததாகவும் அம்மனுக்கு பூசாரி பாலாபிஷேகம் செய்ததாகவும் அதன் பிறகு தான் கண் மூடியதாகவும் கோவிலில் வசித்து வரும் பக்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .