அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்.. காத்திருக்கும் பதவி என்ன?

Siva

ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (10:22 IST)
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை ராஜினாமா செய்த நிலையில், நேற்று அவரது பதவிக்கு மாற்றாக நயினார் நாகேந்திரன் தலைவராக பொறுப்பேற்றார்.
 
இந்த நிலையில், இன்று அண்ணாமலை திடீரென டெல்லி சென்றுள்ளதாகவும், அவருக்கு ஒரு பெரிய பதவி காத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
 
பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அண்ணாமலையின் திறமையை பாராட்டி, அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அமித்ஷா தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், அண்ணாமலை உட்பட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் தலா ஒருவருக்கு இந்த பதவிக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா, வானதி சீனிவாசன், கே. பி. ராமலிங்கம், கராத்தே தியாகராஜன், கரு நாகராஜன், ராம சீனிவாசன் உள்ளிட்டவர்களுக்கும் தேசிய பொதுக்குழு பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் செய்துள்ளார். இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
38 பேருக்கும் அளித்த பதவியை தனக்கும் வழங்கியிருப்பதால், தனக்குச் சிறப்பு பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அண்ணாமலை சார்பில் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்