காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

Siva

ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (08:01 IST)
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ரூ.661 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை கையகப்படுத்த அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியாகிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்குகள் வைத்துள்ள ஏஜேஎல் நிறுவனம், "யங் இந்தியா" நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

இந்த நிறுவனங்கள் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக சுப்ரமணிய சாமி கடந்த 2014ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது அந்த வழக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த வளாகங்களை காலி செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

போலி நன்கொடையாக ரூ.18 கோடி, முன்கூட்டிய வாடகையாக ரூ.38 கோடி, விளம்பரங்களுக்கு ரூ.29 கோடி செலவிடப்பட்டதாக "எங்கு இந்தியா" மற்றும் ஏஜேஎல் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

ஏற்கனவே இந்த வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. தற்போது இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களும் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுவது, அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்