காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏவுக்கு ரோஜாப்பூ கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ: சட்டமன்றத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (19:07 IST)
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு அதிமுக  எம்எல்ஏ ஒருவர் வாழ்த்து தெரிவித்து சட்டமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி இன்று சட்டமன்றத்தில் பேசியபோது அதிமுக காலத்தில் கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்றும் அந்தத் திட்டத்தால் பலரும் பயனடைவார்கள் என்றும் பேசினார் 
 
அவரது பேச்சை கேட்டு அதிமுக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பாப்பாரப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி ரோஜா பூவை எடுத்து விஜயதாரிணிக்கு கொடுத்து வாழ்த்து கூறினார். இந்த சம்பவம் சட்டமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்