தமிழகம் முழுவதும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, சுங்க வரி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துவரியை குறைக்கக்கோரி அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்த நிலையில் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி “கொரோனாவால் மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்துவரி உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சொத்துவரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை. மக்களுக்கு திமுகவின் தேர்தல் பரிசே சொத்து வரி உயர்வு” என்று தெரிவித்துள்ளார்.