புருஷன் பொண்டாட்டிய பிரிச்சாச்சு: ஜெயகுமார் வெரி ஹெப்பி...

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (17:04 IST)
தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒருசில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்களும் வியாபாரிகளும் மஞ்சப்பைக்கு மாறி வருகின்றனர். அதேபோல் தூக்குவாளிகளும் அதிக அளவில் கண்ணில் தென்படுகின்றது. 
 
ஓட்டல்களில் சட்னி, சாம்பார் கட்டி கொடுக்க அலுமினியத்தால் ஆன கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. சென்னை உள்பட அனைத்து நகரங்களில் உள்ள ஓட்டல்களிலும் கேரிபேக்கிற்கு பதிலாக துணிப்பைகள் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆனால் தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு  எல்லா வகை பிளாஸ்டிக்குக்கும் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பின்வருமாரு பேசினார். எத்தனையோ வருஷங்களாக மனிதனோடு ஒன்றி இருந்தது பிளாஸ்டிக். மக்களும், பிளாஸ்டிக்கும் கிட்டத்தட்ட கணவன் - மனைவி போல இருந்தார்கள். காலத்தின் கட்டாயம் இப்போது டைவர்ஸ் வாங்க வேண்டிய நிலை வந்துவிட்டது. 
 
ஆனால் அரசு எல்லா பிளாஸ்டிக்கையும் ஒழிக்க வேண்டும் என கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், எல்லா வகை பிளாஸ்டிக்கையும் ஒரே நாளில் ஒழிப்பது சாத்தியமில்லை. இருப்பினும் தமிழக அரசு இது குறித்து ஆராய்ந்து நல்ல முடிவையே எடுக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்