அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு: ஓபிஎஸ் எதிர்காலம் முடிவு செய்யப்படுமா?

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (18:36 IST)
அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது 
 
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி தேர்வு செல்லுமா? ஓபிஎஸ்-இன் அரசியல் எதிர்காலம் என்ன என்பது இந்த தீர்ப்பில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்