மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி மீது ஊழல் வழக்கு: 6 ஆண்டுகள் சிறை என தீர்ப்பு

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (07:56 IST)
மியான்மர் நாட்டின் அரசியல் தலைவர் ஆங் சான் சூகி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கில் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நாட்டின் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மியான்மர் நாட்டை ராணுவம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் 
 
மேலும் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக ஆங் சாங் சுகி அவர்களுக்கு ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் நடந்த வழக்கில் மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இராணுவ ஆட்சியை எதிர்த்து கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வந்த 77 வயதான ஆங் சாங் சூகி தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளார். மேலும் இந்த தண்டனை அநியாயமானது என்று உலகின் பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்