நான் போயிருந்த தடுத்திருக்கலாம்… செருப்பு வீச்சு குறித்து அண்ணமலை!!

ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (13:39 IST)
ஒருவேளை நான் அரைமணி நேரம் முன்னாடி சென்றிருந்தால் இதை தடுத்திருக்கலாம் என அண்ணாமலை பேச்சு.


சமீபத்தில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் நேற்று மதுரைக்கு வந்தது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த வருகை தந்தார்.

அப்போது பாஜகவினரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் நிதியமைச்சர் அஞ்சலி செலுத்தி சென்ற உடன் அஞ்சலி செலுத்தலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது பாஜகவினர் செருப்பு வீசியதாக தெரிகிறது. மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனையடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 24 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது குறித்து தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது, பாஜக எப்போது அமைதியை விரும்பக்கூடிய கட்சி, கலவரத்தை விரும்பக்கூடிய கட்சி கிடையாது. நேற்று மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பொதுமக்களிடம் பேசிய வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் அமைச்சரின் கார் மீது காலனி வீசிய சம்பவமும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் இச்சம்பவம் நேற்று நடந்திருக்க கூடாது. ஒருவேளை நான் அரைமணி நேரம் முன்னாடி சென்றிருந்தால் இதை தடுத்திருக்கலாம். அதற்குள் சண்டையெல்லாம் முடிந்து ரொம்ப சூடாக இருந்தார்கள். நேற்று நடந்த இச்சம்பவம் கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிரானது.

காவல்துறை கைது செய்துள்ள நபர்களில் சில அப்பாவிகள் உள்ளனர். அவர்கள் அந்த இடத்தில் இல்லாதவர்கள். தவறு யார் செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யட்டும். மேலும் கட்சி தொண்டர்கள் அனைத்திற்கும் உணர்ச்சிவசபட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்