அண்ணாமலையின் பாதயாத்திரை ஒத்திவைப்பு- பாஜக அறிவிப்பு

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (17:02 IST)
அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் நடைப்பயணம் வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக இன்று அறிவித்துள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம் சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் தொடங்கி,  மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,  கோவை, ஊட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

இதற்கிடையே அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி முறிந்த நிலையில் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று, தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் நடைப்பயணம் வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக இன்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்