பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன் எல்லோரும் யோசியுங்கள்: பிரேமலதா

புதன், 4 அக்டோபர் 2023 (07:48 IST)
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலக்கி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள அரசியல் கட்சிகள் அதிமுகவுடன் இணையுமா அல்லது பாஜகவுடன் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்திற்கு பாஜக எதுவும் செய்யவில்லை என்றும் கச்சத்தீவு பிரச்சனை, காவிரி பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை உட்பட எந்த பிரச்சனையும் தீர்க்கவில்லை என்றும் எனவே தமிழகத்திற்கு எந்த விதமான நல்லதும் செய்யாத பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
இதனை அடுத்து தேமுதிக பாஜகவுடன் கூட்டணியில் சேராது என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்