டெல்லி சென்று திரும்பியதும் மாற்றம்; அமைதி காக்கும் அண்ணாமலை! – என்ன காரணம்?

புதன், 4 அக்டோபர் 2023 (09:46 IST)
அதிமுக – பாஜக கூட்டணி முறிவை தொடர்ந்து டெல்லி சென்று பாஜக தலைமையை சந்தித்து வந்துள்ளார் அண்ணாமலை.



ஆரம்பம் முதலே அண்ணாமலை பேச்சுகளால்தான் அதிமுகவுடன் பாஜக மாநில தலைமைக்கு கசப்புணர்வு ஏற்பட்டது. ஆனால் அதிமுக கூட்டணி முறிவை பாஜகவினர் பலரே ஆதரிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில்தான் நேற்று டெல்லி சென்று பாஜக தலைமையை சந்தித்து வந்தார் மாநில தலைவர் அண்ணாமலை.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை கேள்வி எழுப்பியபோது எந்த பதிலும் சொல்லாமல் சென்ற அண்ணாமலை “இரண்டு நாட்களுக்கு எதையாவது எழுதிக் கொள்ளுங்கள்” என சொல்லியுள்ளாராம். இரண்டு நாட்கள் கழித்து அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பயணம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்கள் கழித்து முக்கியமான அறிவுப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையை பதவியை விட்டு நீக்கினால்தான் கூட்டணி தொடரும் என முன்னதாக அதிமுக பிரமுகர்கள் கூறி வந்த நிலையில் அவர்களை சமரசம் செய்ய அண்ணாமலை பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல, அரசியலில் இல்லாவிட்டால் கவலைப்பட மாட்டேன். விவசாயம் பார்க்க போய் விடுவேன் என அண்ணாமலை பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்