பிரசன்னா பேசிய அளவுக்கு கூட கமல், ரஜினி பேசாதது ஏன்?

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (23:20 IST)
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக வேண்டும் என்று நினைத்து வரும் நிலையில் மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு இருவரும் குரல் கொடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

குறிப்பாக சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த விதவைப்பெண் ஆராயி மற்றும் அவரது எட்டு வயது மகன் மீதான வெறித்தனமான தாக்குதல், அந்த பெண்ணின் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர செய்தது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எந்த அரசியல் கட்சி தலைவர்களும் ஓட்டு அரசியலை மனதில் வைத்து பெரிதாக குரல் கொடுக்கவில்லை. ஆனால் புதியதாக கட்சி தொடங்கியிருக்கும் கமலும், கட்சி தொடங்கவிருக்கும் ரஜினியும் கூட மெளனமாக உள்ளது பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் பிரசன்னா இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: விழுப்புரத்தில் ஆராயி மற்றும் அவரின் 8 வயது மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு காரணமா?” என்று  வினவியுள்ள பிரசன்னா, கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மதுவை கொன்ற கும்பல் கைது செய்ததைப் போல் இங்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் மதுக்களும் ஆராயிகளும் பிள்ளைக்கொலைகளும் வன்புணர்வுகளும் நாளும் நடந்தேறும் நம் முற்றத்தை சீர்செய்யாத நாம், சிரியாவின் படுகொலைகளை உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது? என்று பதிவு செய்துள்ளார். பிரசன்னாவுக்கு இருக்கும் தைரியம் கூட கமல், ரஜினிக்கு இல்லையா? என்பதே நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்