தம்பி சூப்பர்ப்பா; கரெக்டா பேசுனா... விஜய்க்கு ஆதரவு தெரிவித்த கமல்!!

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (08:43 IST)
சுபஸ்ரீ விஷயத்தில் நடிகர் விஜய் பேசியதற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் வைத்த பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலதரப்பட்டோர் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிகில் பட ஆடியோ வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் சுபஸ்ரீ மரணம் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார். விஜய் கூறியதாவது, 
சுபஸ்ரீ குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டு, சுபஸ்ரீ விஷயத்தில் யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவர்களை கைது செய்யாமல், பிரின்டிங் பிரஸ் வைத்து இருப்பவரையுன், லாரி டிரைவரையும் கைது செய்துள்ளார்கள் என பேசினார். 
 
தற்போது இதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். விஜய் நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார். நல்ல ஒரு மேடையை நியாயமாக குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தி இருக்கிறார் தம்பி விஜய். அவருக்கு எனது பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்