வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து விளையாட்டு போன்றது என்றும், அதில் நாம் கோல் போட முயற்சி செய்யும்போது அதை தடுக்க ஒரு கூட்டம் வரும் என்றும், அதுவாவது பரவாயில்லை, நம்ம கூட இருக்குறவனே சிலசமயம் சேம்சைட் கோல் போடுவான் என்றும் வாழ்க்கையின் எதார்த்தத்தை விஜய் இரண்டே வரிகளில் மிக அழகாக கூறினார்.
அதேபோல் யாரோட அடையாளத்தையும் ஏற்று கொள்ள வேண்டாம் என்றும் உங்களுக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கி அதை ஏற்றுக்கொண்டு வாழுங்கள் என்றும் கூறிய விஜய், ‘வாழ்க்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீங்க, அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா இருங்க’ என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.