ஆவின், போக்குவர்த்து துறை ஊழியர்கள் இனி டி என் பி எஸ் சி மூலமாக நிரப்பப்படும் – அமைச்சர் பதில்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:18 IST)
இன்று சட்டசபையில் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துக்கும் இனி டி என் பி எஸ் சி மூலமாக ஆட்சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின்  கட்டுப்பாட்டில் வரும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஆட்சேர்க்கை தொடர்பான பணிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டசபையில் பேசினார். இதன் மூலம் ஆவின் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்கு இனிமேல் டி என் பி எஸ் சியே ஆட்சேர்க்கை நடத்தும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்